பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தியேட்டரில் 100% ரசிகர்களா?
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தியேட்டரில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமா? இது நல்லதல்லவே என்று உயர் நீதிமன்றம் கருத்தைத் தெரிவித்துள்ளது. தமிழக அரசிடம் உச்ச நீதிமன்ற மதுரை கிளை விரிவான விளக்கம் வேண்டி கருத்து தெரிவித்துள்ளது.

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதிப்பது குறித்து ஜனவரி 11ல் விரிவான விளக்கத்தைக் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. விளக்கம் தரும் வரை 50% இருக்கைகளை மட்டுமே அனுமதிக்கப்பட கோரி உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். ஒரு குழந்தையைப் போல தியேட்டர்களின் விவகாரத்திலும் மெல்ல அடி எடுத்து வைக்க வேண்டும். இதைக் குறித்த வழக்கையும், உயர்நீதிமன்ற மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும் என்று நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.