10 வயது சிறுமி சமையலில் படைத்த சாதனை!
எர்ணா குளத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் பிரஜித் பாபுவின் மகள் பத்து வயது நிரம்பிய சன்வி பிரஜித் 60 நிமிடங்களில் 30 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆகஸ்டு 29 ஆம் தேதி படைக்கப்பட்டாலும் தற்போது தான் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
- கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவுகளை சமைத்து சாதனை.
- சமையல் மீதான காதலால் இந்த சாதனையை படைத்துள்ளார்.
- இவர் இந்த சாதனையை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.
சமையல் மீதான காதலால் பத்து வயதை சேர்ந்த கேரள சிறுமி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 30 வகையான உணவுகளை சமைத்து அசத்தி உள்ளார். சமையல் என்பது ஒரு வகை கலை. சிலர் இவற்றை வேலையாக செய்யாமல் ரசித்து செய்வார்கள். சிலருக்கு சமையலில் அதிக ஆர்வமும் இருக்கும்.
சன்வியின் தாயாரும் சமையல் நிபுணர் ஆவார். தாயாரின் சமையல் கலையில் ஈர்க்கப்பட்டதால் இந்த சாதனையை செய்ததாக இச்சிறுமி தெரிவித்தார். இச்சிறுமி யூடியூபில் சமையல் கலையையும் கற்றுக் கொடுக்கிறார் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.