10 ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாதா..?
10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி உபயோகிக்கலாம் என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாஜகவின் முக்கிய வாக்குறுதியாக கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்படும் என கூறியது. பெரும் வரவேற்பை பெற்ரது. இதன் மூலம் கள்ளப்பணம் ஒழிக்கப்பட்டு, போதை பொருள் கடத்தல், தீவிரவாதம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும் என நம்பினார்.
இந்நிலையில் 2016 நவம்பர் 8-ஆம் தேதி… அன்றைய தினம் வேலைகளுக்கு சென்றவர்கள் வழக்கமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ‘பிரதமர் மோடி இன்று மாலை 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் பேசுகிறார்’ என முதலில் செய்திகள் வெளியானபோது வழக்கமான செய்திதான் என கடந்து போனார்கள். ஆனால், பிரதமர் தனது உரையில் சொன்ன விஷயம் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு நிமிடம் உறையச் செய்தது. அதுவரை நாட்டு மக்கள் தங்களிடம் இருப்பதிலேயே அதிக மதிப்புள்ளதாக கருதி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதனையடுத்து தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளிலும், தபால் நிலையங்களில் வரிசையில் நின்று மக்கள் சந்தித்த பிரச்சனை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அடுத்த சில நாட்களில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வத்ந்தி காட்டுத்தீயாக பரவியது. இதனால் பெரும்பாலன இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் சொல்லாமலே இருந்தது. பேருந்தில் நடத்துநர் கூட வாங்க மறுப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.
இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “நாட்டில் சட்டப் பூர்வமாக நடைபெறும் டெண்டர்கள், பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம். 10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி உபயோகிக்கலாம்” என்றார்.