ஜியோவுடன் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் ரூபாய் 777 அதிரடி அறிவிப்பு
இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தனது அதிரடியான திட்டங்கள் மூலம் தொடந்து தன்னை மார்க்கெட்டில் நிலைநிறுத்த முயற்ச்சிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு இணையான அறிவிப்புக்களை வழங்கி வருவதில் பிஎஸ்என்எல்க்கு நிகர் பிஎஸ்என்எல்தான், இதன்படி பி.எஸ்.என்.எல்லின் ரூ.777 பிராட்பேண்ட் திட்டத்தை மீண்டும் சந்தைக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பிஎஸ்.என்.எல்லா கொக்கா!:
ஜியோவால் ஏர்செல், ஏர்டெல், வோடோபோன் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. அதன் விளைவு ஜியோவுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். விடாபிடியாக ஏர்டெல், வோடடோபோன், தனது பங்கிற்கு ஆட்டத்தை களைக்க முயற்சித்து டேட்டாக்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கூட்டி கழித்துப் பார்த்தால் என்னதான் தனியார் நிறுவனமான ஜியோவை விட பி.எஸ்.என்.எல்தான் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான பிராட்பேண்ட் நெட்வொர்க்கை கொண்டிருந்தது. ஜியோ தற்பொழுது மீண்டும், பி.எஸ்.என்.எல் அதன் திட்டங்களை திருத்தி அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்நாட்டில் உள்ள அனைத்து வயர்டு பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களை விட ஒரு ஜிபிக்கு மிகக் குறைந்த கட்டண விகிதத்தை வழங்கும் நிறுவனமாக பி.எஸ்.என்.எல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.