குரூப் II நேரடிதேர்வு

குரூப் II நேரடிதேர்வு :

அரசு பணி என்ற கனவு கொண்டு படித்துவரும் தேர்வர்கள் உயர்ந்த பதவியில் பணியாற்றி மக்களுக்கும் அரசுக்கும் சேவையாற்ற விரும்புவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்த அரசு அறிவிக்கும் பொழுது விண்ணப்பித்து வேலை வாய்ப்பு பெறவும். 

இங்கு டிஎன்பிஎஸ்சியின்  அதிகாரப்பூர்வ தளத்தை கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்து அறிவிக்கையை பின்ப்பற்றுங்கள். 

அத்துடன் குரூப் 2 தேர்வின் விவரங்கள் எவ்வாறு படிக்க வேண்டும் மற்றும் தேர்வு முறை குறித்து முழுமையாக அறிவோம்.  

டிஎன்பிஎஸ்சி என்ற கனவு வாரியத்தில் குரூப் II பதவி போட்டிதேர்வு கனவு கொண்டவர்கள் எண்ணிக்கை சமீபத்தில் பெருகி வருகின்றது லட்சக்கணக்கான தேர்வு எழுதுவோர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வருடா வருடம் ஆண்டறிக்கை வெளிவந்த நாள் முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கென திட்டமிடுவோரின் எண்ணிக்கை பெருகி வருகின்றது .

“ கெட்டிக்காரனுக்கு எதுவும் பாரமில்லை
உழைப்பாளிக்கு எதுவும் அதிக தூரமில்லை
நன்கு கல்வி பயின்றவனுக்கு எந்த இடமும்
வெளிநாடு இல்லை
இனிமையாக பேசுபவனுக்கு வேண்டாதவன்
எவனுமில்லை “.

குரூப் II :

குரூப் II தேர்வு என்பது கனவாக கொண்டவர்கள் எண்ணிக்கை பெருகிய வருகின்றது . குரூப் II என்பது தமிழ்நாட்டு பணி நியமன வாரியத்தின் கிரேடு II பொறுப்பாகும். இது குரூப் I பதவிக்கு அடுத்த நிலையாகும். குரூப் II துணை கமர்சியல் டேக்ஸ் ஆஃபிசர், தொழிலாளர் துணை கண்காணிப்பாளர், துணை வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற பதவிகளை கொண்டது. தேர்வானது ஆண்டறிக்கையின் படி தேர்வுத் தேதி அறிவிக்கப்படுகிறது, விண்ணப்பம், தேர்வுநாள், விண்ணப்ப தேதி, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் குரூப் 2 நோட்டிஃபிகேசனில் அறிவிக்கப்பட்டிருக்கும். குரூப் 2 தேர்வு அறிவிக்கப்பட்ட நாள்முதல் அதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வது முதல், படிக்குமுறை, மேலும் தேர்வுக்கு தயாராகும் யுக்திகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிலேட் குச்சி  மூலமாக அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு தயாரகும் முன்பு விண்ணப்ப விவரங்கள் அறிந்து, விண்ணப்பித்து, படிக்க தொடங்குங்கள் வெற்றி பெறுங்கள் .

குரூப் 2 தேர்வுக்கான இந்த விவரப் பதிவு  புதிதாக தேர்வு எழுதுவோர்க்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்றும். எப்பொழுதும் இது எல்லோர்க்கும் எளிய வழியில் தேவையான  தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலேட் குச்சி இந்தியா தளத்தால்  உருவாக்கப்பட்டு  தேர்வர்களுக்கு சமர்ப்பிக்க படுகின்றது. 

வெற்றி என்ற ஒரு தாரக மந்திர சிந்தனையுடன் திட்டமிட்டு படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை எழுத  தேர்வர்களுக்கான தகுதிகள் அடுத்த பதிவில் பார்க்கலாம். 

தகுதிகள்:

குரூப் 2 தேர்வினை வெல்ல கனவுகளுடன் படிக்க தொடங்க நினைக்கும் தேர்வர்களுக்கு இந்த பதிவுகள் உதவிகரமாக இருக்கும்.  அரசு தேர்வுகளில் விண்ணப்பிக்க அடிப்படையானது அத்தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் ஆகும். அது குறித்து சரியான விளக்கங்கள் பலருக்கு இருப்பதில்லை ஆகையால இதனை முழுமையாக  அறிந்து விண்ணப்பிக்க வேண்டியது அவசியனாகும். 

குருப் II தேர்வு தேர்வு எழுத தமிழக அரசு பணிவாரியம் நிர்ணயித்த வயது குறைந்தபடசம் 18 முதல் 21 வயது இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு சில குறைந்த பட்ச வயது குறிப்பிடப்படுள்ளது. அவையாவன

ஜூனியர் எம்பாள்ய்மெண்ட் ஆஃபிசர், கமர்சியல் டேக்ஸ் ஆஃபிசர் பதவிக்கு குறைந்தபட்ச வயது 18 அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .

சப் ரெஜிஸ்டர் பதிவிக்கு குறைந்தபடச வயது 20 வயது அதிக பட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஜூனியர் எம்பாளயிமெண்ட ஆஃபிசர் மற்றும் துணை கமர்சயல் ஆஃபிசர் வயதுகள் 18 முதல் 30 வயது வரை இருத்தலே தகுதியாகும் .

புரேபசன் ஆஃபிசர் வயது 22 முதல் 40 வரை இருக்கவேண்டும். துணை கமர்சியல் ஆஃபிசர் தகுதியானது 30 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். ஆனால் சட்டம் பயின்றவர்களுக்கு மட்டும் வயது தளர்த்தப்பட்டு 37 வயதாக தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் குரூப் II பொருத்த வரை பொதுவாக 40 வயது அதிகபட்ச வயதாகும்.

தேர்வுகள்:

தேர்வானது மூன்று நிலைகளை கொண்டது முதன்மை, முக்கியதேர்வு, நேரடித்தேர்வாகும். 

குரூப்  2 தேர்வின் மூன்று நிலைகளில் முக்கியமானது முதன்மை தேர்வாகும். இதனை முழுமையாக அறிந்து அனைவரும்  படிக்க வேண்டியது முக்கியமாகும்.  முதன்மை தேர்வு கொள்குறி என அழைக்கப்படும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.  முதன்மை தேர்வில் வெற்றி பெறுவோர் முக்கிய தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முக்கிய தேர்வு விளக்கவுரையில் எழுத வேண்டும். முதன்மை தேர்வில் வெற்றி பெறுவோர்கள்  நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேரடி தேர்வில் வெற்றி பெறுவோர்கள் மதிபெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு  மதிபெண்களுக்கு ஏற்ப பதவிகள் தேர்ந்தெடுத்து பயிர்சிக்கு அழைக்கப்பட்டு  பணியில் அமர்த்தப் படுவார்கள்.

குரூப் 2 தேர்வுநிலை விளக்கங்கள் : 

முதன்மை தேர்வு:

“மனமே எல்லாம் , நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே மாறுகிறாய் “. என்ற கூற்றுகேற்ப நாம் நல்லதையே நினைக்க வேண்டும். நேர்மறை சிந்தனைகளை உடன் கொண்டு தேர்வை எதிர்கொள்ள வேண்டும். குரூப் II தேர்வை பொருத்தவரை முதன்மை தேர்வு 200 கேள்விகள் கொண்டது. 3 மணி நேரம் மொழி பாடத்தில் 100 கேள்விகள், பொதுஅறிவு பாடத்தில் 100 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

மொத்தம் 300 மதிபெண்கள் கொண்டது. பொதுஅறிவு கேள்வியானது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளில் இருக்கும். கேள்விகள் கொள்குறி முறையான அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். சரியான விடையை விடைத் தாளில் குறிக்க வேண்டும். கேள்வி சரியாக பார்த்து விடையளிக்க வேண்டும். இவற்றில் கட் ஆஃப் அதிகம் எடுக்க வேண்டியது போட்டிதேர்வு எழுதுவோர் கையில் உள்ளது .

முக்கியதேர்வு :

குரூப் II இரண்டாம் நிலை தேர்வான முக்கியதேர்வானது ஒரே தாள் கொண்டது. 300 மதிப்பெண்கள் 3மணி நேரம் கொண்டது. விளக்கவுரை பதில் எழுத வேண்டும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் . விடைகள் ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழியில் எழுதலாம் .

கேள்விகள் கேட்கப்படும் பகுதிகள்:

1.  இந்திய தமிழ்நாட்டளவில் அறிவியல் தொழிநுட்பத்தின் தாக்கம்

2. மத்திய தமிழக நிர்வாகத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள்

3. இந்திய தமிழகத்தின் சமூக சிக்கல்கள்

4. தேசிய நடப்பு நிகழ்வுகள்

5. தமிழக நடப்பு நிகழ்வுகள் .

குரூப் II நேரடிதேர்வு:

குரூப் II தேர்வின் இறுதி நிலையாக நேரடிதேர்வு இது கேள்விகளுக்கு விடைதரும் போக்கில் இருக்கும். நேரடிதேர்வானது தேர்வு எழுதுவோரின் பிறந்தயிடம் அவ்விடத்தின் வரலாறு சிறப்புத்தன்மை மற்றும் தேர்வு எழுதுவோரின் பொழுது போக்குகள், நடப்பில் நாடு மற்றும் சமுகசிக்கல்கள் பற்றி கேள்வியிருக்கும். தேர்வாளரின் சாமர்த்தியம், விடைகூறும் போக்கு ஆளுமை தன்மை கணக்கிட்டு மதிபெண்கள் வழங்கப்படும். குரூப் 2 நேரடி தேர்வானது  40 மதிபெண்கள் கொண்டது ஆகும். இறுதியில் முக்கிய தேர்வு மற்றும் நேரடிதேர்வு மதிபெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டு தேர்வாளரின் சாதி பின்னனி ரிசர்வேசன் முறையில் மதிபெண் வழங்கப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுகிறார். இதுவே குரூப் II தேர்வுக்கு எழுதுவோர் அறிய வேண்டிய தேர்வு நிலைகள் ஆகும். இதனை முழுமையாக தெரிந்து கொண்டாலே படிக்க  வேண்டிய முறைகளை தெளிவாக வகுத்து கொள்ளலாம்.  

குரூப் 2 தேர்வகளின் தேர்ச்சி  முறை:

குரூப் 2 தேர்வு எழுதுவோர் தேர்ந்தெடுப்பு முறையானது தேர்வு எழுதவோ சாதி பின்னனி அதன்படி நிர்ணயித்த மதிபெண்கள் வைத்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதண்மை தேர்வில் அவர் சேர்ந்த பிரிவு அவரை சேர்ந்தோர்  கட் ஆஃப் மதிபெண்கள் பொருத்து மாறுபடும். நேரடி தேர்வுக்கும் அவ்வாறே ரிசர்வேசன் பெரும் பங்கும் வகிக்கும். மேலும் குரூப் 2 தேர்வை பொருத்தவரைக்கும் சில  பதவிகளுக்கு மதிபெண்களோடு, பட்டப்படிப்புகள் மற்றும் தேவைப்படும் உடல் தகுதிகள் முன்னுரிமை பெறுகின்றன. இவ்வாறு அனைத்து நிலைகளையும் கடந்துதான் குரூப் 2 தேர்வு எழுதுவோர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பம் :

அடுத்த  குறிப்பு 2  தேர்வுக்கு விண்ணப்பம் , விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம்.

குரூப் 2 தேர்வுக்கான  அறிவிப்புகள் வெளிவந்ததும் நாம் அறிவிப்புகளை படித்தவுடன் நாம் அடுத்து செய்வது விண்ணப்பம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய கேட்கப்பட்டுள்ள தகவல்களை  முழுமையாக முறையாக படித்துப் பார்த்து   தேவையான தகவல்களை முறைப்படி கொடுத்து சப்மிட் செய்யவும்.

குரூப் 2 தேர்வு எழுதுவோர் கவனிக்கவேண்டியவை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க இயலும். குருப் 2 தேர்வு எழுதுவோர் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். முதன் முறையாக போட்டி தேர்வு எழுதுவோர் டிஎன்பிஎஸ்சியின் பதிவுகட்டணம் ரூபாய் 150 சேர்த்து செலுத்த வேண்டும். ஒருமுறை செலுத்தினால் போதுமானது பதிவுகட்டணம் செலுத்தி தேர்வாளர்கள் தங்களுக்கான டிஎன்பிஎஸ்சி ஒதுக்கும் இணைய முகவரி மற்றும் கடவுசீட்டு என அழைக்கப்படும் பாஸ்வோர்டு உருவாக்கி கொள்ளலாம். மேலும் அதனை ஐந்து வருடம் மட்டுமே உபயோகிக்கலாம் பிறகு வேண்டுமெனில் மீண்டும் பதிவு கட்டணம் செலுத்தி பெற வேண்டும் இணைய முகவரி புதிதாக பெற வேண்டும். ஆன்லைன் மற்றும் அஞ்சல், வங்கி செலான் மூலமும் தேர்வு கட்டணத்தை செலுத்த  முடியும். விண்ணப்பிக்க தொடக்க தேதி, விண்ணப்பிக்க இறுதி நாள், கட்டணம் செலுத்த இறுதி தேதி மற்றும் தேர்வு நாள் போன்ற விவரங்கள் அனைத்தும் தேர்வு அறிவிக்கையான நோட்டிஃபிகேசனில் அறிவிக்கப்பட்டிருக்கும். எஸ்சி என அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ்(எஸ்டி) மக்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு மட்டுமே விண்ணபிக்க சலுகையுண்டு மற்ற பிரிவினர்கள் மூன்று வாய்ப்புகள் மட்டுமே கட்டண சலுகை பயன்படுத்த முடியும்.  மூன்று வாய்ப்புகள் உபயோகித்தவர்கள் பின் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் .

விண்ணப்பிக்கும் அனைவரும் வழிமுறையை சரியாக பின்பற்ற வேண்டும் .

விண்ணப்பங்கள் விவரம் :

பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, இந்தியன் மற்றும் கல்வித்தகுதி தொடங்கி திருமணமானவரா போன்ற தகவல்களுடன் சாதி, மதம், முகவரி, விண்ணப்பத்தாரர் விரும்பும் பதவி, விண்ணப்பதாரர் ஊனமுற்றவரா அல்லது பெண் விண்ணப்பத்தாரறெனில் விதவை மற்றும் கணவனை பிரிந்தவரா என்பதை அறிவிக்க வேண்டும். மேலும் ஆண்கள் பாதுகாப்பு படையில் பணியாற்றியவரா என்பதை அறிவிக்க வேண்டும் .

சான்றிதழ் எண் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதிகள் போன்ற தேவைப்படும் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் விண்ணப்பத்தாரர் ஏதேனும் இயக்கம் மற்றும் கட்சியை சேர்ந்தவரெனில் அறிவிக்க வேண்டும் அத்துடன் எந்த ஒரு வழக்கிலும் பங்குகொண்டு முதன்மை நடவடிக்கையென அழைக்கப்படும் (எஃப்ஐஆர் ) சந்தித்தவரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு நிர்வாகசீர்த்திருத்ததின் கிழ் 20% மதிபெண்கள் வழங்கப்படும் அவற்றை விண்ணப்ப படிவத்தில் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும். இறுதியாக தேர்வு எழுதும் இடம் போன்ற தகவல்கள் கொடுத்து விண்ணப்பத் தகவல்களுக்கு உறுதி கொடுத்து சமர்ப்பிக்க (சப்மிட்) வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர் தங்களுடைய புகைப்படம் மற்றும் கையெப்பம் நகல் இணைக்க வேண்டும். அதன்பின் பதிவு நம்பர் கிடைக்கும் அவற்றை சேமித்து அட்மிட் கார்டு பெறும் போது பயன்படுத்தலாம். மேலும் விண்ணப்ப இணைப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. பொதுதேர்வுக்குத் தயாரவோர் அதனைப் பயன்படுத்திகொள்ளலாம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஒன்று புரிந்துகொள்ளுங்கள் “கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும். விண்ணப்பிக்கும்போது இவ்வரிகளை மனதில் கொண்டு விண்ணப்பியுங்கள்  தேர்வை வெல்லுங்கள்.


டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுகென  விண்ணப்பிக்கும் முறையை விளக்கியுள்ளது அதற்கான லிங்கினை இங்கு இணைத்துள்ளோம். அதனை பின்ப்பற்றி  அப்ளை செய்யவும்.  

குரூப் 2 தேர்வுக்கான புத்தகங்கள்:

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வை வெல்ல படிக்க வேண்டிய பாடங்கள் குறித்து முந்தைய பதிவுகளில் தெரிவித்தேன்.  அப்பாடங்கள் கொண்ட புத்தகங்களை தேர்வர்கள் தெரிந்து கொள்ள  வேண்டும். இப்பதிவுகள் அனைத்தும் இப்பொழுது மட்டுமல்ல காலம் காலமாக  இது அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால் இது குறித்து  தெரிவிப்பதில் சிலேட் குச்சி இந்தியா பெருமிதம் கொள்கின்றது.

குரூப் 2 தேர்வின் பாதி வெற்றியை முழுமையாக உறுதி செய்வது மொழிப்பாடங்களில் தேர்வர்கள் நன்றாக படித்திருந்தால் நிச்சயம் அவர்களால் எளிதாக   வெற்றியை நோக்கி  பயணிக்க முடியும். மொழிப்பாடத்தில் நூறு கேள்விக்கு சரியான பதில் அளித்திருப்பவர்கள் நிச்சயம் பொது அறிவுப் பாடத்தில் 70% சதவிகித மதிபெண்கள் பெற்றிருத்தலே போதுமானது ஆகும்.

சிலேட்குச்சி  இந்தியா தளத்தில் போட்டி குரூப் 2 தேர்வுக்கான கேள்வி பதில்கள் கொடுத்துள்ளோம். அதனை பின்பற்றி படியுங்க. மேலும் கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து புத்தகங்களும் பெறலாம்.

மொழிப்பாடம் தமிழ்:

அரசியலமைப்பு புத்தகம் :

வரலாற்று புத்தகங்கள் :

  • தர்மராஜ் புத்தகங்கள் அடிப்படைத்தகவல் விளக்கத்திற்கு.
  • (பழமை இந்தியா, இடைக்கால இந்தியா, 
  • நவீன கால  இந்தியா, 
  • நடப்பு இந்தியா )

   வெங்கடேசன் புத்தங்கள் விளக்கத்திற்கு (பழமை இந்தியா, இடைக்கால  இந்தியா,

  நவீன கால இந்திய வரலாறு ,

நடப்பு இந்தியா ).

ஆண்டு பொது அறிவு புத்தகம்:

பொருளியல் புத்தகங்கள் :

 நடப்பு நிகழ்வுகளின் இதழ்கள்:

  • நக்கீரனின் மாத பொது அறிவு மாத இதழ்
  • எக்ஸாம் மாஸ்டர்
  • மனானா பதிப்பகத்தின் பருவ நடப்பு இதழ்
  • பொது அறிவு உலகம் நக்கீரன் பதிப்பகம்

இணையதள நடப்பு நிகழ்வுகள் :

  • டிஎன்பிஎஸ்சி போர்டல் 
  • மாணவன் வெப்சைட்
  • டிஎன்பிஎஸ்சி குரு
  • ஜிகே டுடே

கணிதம்: 

புவியியல்: 

பொது  அறிவு புத்தகங்கள் :

 நடப்பு நிகழ்வுக்கான நக்கீரனின் புத்தகம் மற்றும் ஆண்டு பொது அறிவு புத்தகங்கம்

அறிவியல்: 

விகடன்  அறிவியல் புத்தகம் 

முந்தய ஆண்டு  வினாவங்கி புத்தங்கள்  பாடவாரியாக:

முந்தய ஆண்டு  வரலாற்று இந்திய தேசிய இயக்கம் புத்தகம்

முந்தய ஆண்டு  தேர்வுக்கான அறிவியல் வினா வங்கி புத்தகம்

முந்தைய் ஆண்டு தேர்வுக்கான அரசியலமைப்பு  வினாவங்கி புத்தகம்

முந்தைய ஆண்டு தேர்வுகளின் புவியியல்  வினாவங்கி புத்தகம் 

பொது தமிழ் வினா- வங்கி 

நாளிதழ் :

  • தினமணி ,
  • தினமலர், 

 கேள்வித்தாள் கணிப்பு :

கடந்த ஐந்து அல்லது மூன்றாண்டுகள் கேள்வித்தாள்கள் நன்றாக படிக்க வேண்டும் அதனை வைத்து கேள்விகளுக்கான முன்னுரிமைகள் தொகுக்க வேண்டும். அனைத்தும் படிக்க வேண்டும் தான் ஆனால் முன்னுரிமை முக்கியமானது உதாரணமாக குருப் 2  முதன்மை தேர்வில் வெற்றி பெற 200 கேள்விகளிள்  100  கேள்விகள் மொழிப்பாடத்தில் எனில் அதற்கு முன்னுரிமை கொடுத்து கட் ஆஃபில் பலர் வெல்கின்றனர். இவ்வாறு டிரிக்குகள் எனப்படும் நுணுக்கம் அறிந்து செயல்பட வேண்டும்.

அடுத்த கவனம் செலுத்த வேண்டியது பொது அறிவு பாடப்பகுதி கேள்விகள் எது அதிகப்படியான எண்ணிக்கை கொண்டது எது எனில் நடப்பு மற்றும் அதனுடன் இணைந்த ஜிகே கேள்விகள் 15 முதல் 20 கேள்விகள், பின் அறிவியல் 15  கேள்விகள்  இடம் பெற்றிருக்கும் இதன்படி பார்த்தால் குருப் 2  தேர்வில் உங்கள் வசம் 45 கேள்விகள் கேட்கப்படும் பகுதிகள் தெரிந்துவிட்டது. மேலும் 25 கேள்விகள் கணிதம், திறனாய்வு போன்ற பகுதிகளில் கேட்கப்படுகின்றது கிட்டத்தட்ட 65 கேள்விகள்  எதிலிருந்து வரும் என்ற கணிப்பு  கிடைத்துவிட்டது.  மீதம் வரலாறு, பொருளியல், புவியியல், இந்திய அரசியலமைப்பு பகுதிகளில் 10 முதல் 15 வரை ஒவ்வொறு பாடங்களிலும் ஏற்றம் இறக்கங்களுடன் கேள்விகள் இருப்பினும் 10 முதல் 20 கேள்விகள் நிச்சயம் அமையும். இவற்றிலும் முந்தய  ஆண்டு  கேள்வித்தாளை நன்கு ஆராய்ந்தால் தவிர்க்க முடியாத கேள்விகள் எப்பாடங்களில் கேட்கப்படுகின்றன என்பதை அறியலாம்.

ஒரு சிறிய உதாரணத்திற்கு இந்திய அரசியலமைப்பு பகுதியில் அடிப்படை உரிமைகள்,கடமைகள், முகவுரை, அரசியலமைப்பு உருவாக்கம் இவற்றில் நிச்சயம் இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன கேள்விகள் மாறுபடலாம் ஆனால் குறிப்பிட்ட பாடங்களில் கேள்வி அமைவது உறுதி, இவற்றை கணித்து செயல்ப்பட்டால் வெற்றி உறுதி இனி வரும காலங்களில் சிலேட்குச்சி இந்தியா  தளம் தொடர்ந்து இவற்றை விளக்கும் .

பாடங்களில் சொந்த குறிப்பு, சிலேட்குச்சி இந்தியா தளம் போன்ற இணைய குறிப்புகள், பொதுஅறிவு புத்தகங்களின் குறிப்புகள் போன்றவற்றை தொகுத்து வைக்க வேண்டும் தொடர்ந்து அவற்றை ரிவைஸ் செய்ய வேண்டும். மேலும் கேள்விகள் உருவாக்கி விடை தருவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும் அல்லது சிலேட்குச்சி தளம் போன்ற இணைய கேள்விகளை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் நாளிதழ்களிள் கேள்விகள் தரப்படுகின்றன அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். சுய பரிசோதனை எனப்படும் செல்ஃப் டெஸ்ட் நம்மை மேம்படுத்தும் தேர்வில் வெற்றி பெற வைக்கும். ஆகவே உங்களது வெற்றிக்காக தொடர்ந்து படியுங்கள் சிலேட்குச்சி.

கேள்வித்தாள் குறிப்பு :

முந்தைய ஆண்டு கேள்விகள் அடங்கிய புத்தகங்கள் எளிதாக கிடைக்கின்றன . அவற்றை பாடவாரியாக பெறலாம். அவற்றை தொடர்ந்து சேகரிக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். படித்தலுடன் அவற்றை டெஸ்ட் மூலம் நினைவு கொள்ள வேண்டும். மேலும் சிலேட்குச்சி தொடர்ந்து கேள்வித்தாள் வழங்கும். தினசரி சில கேள்விகளை பயிற்சியில் வழங்கும் அவற்றை தொடர்ந்து படியுங்கள் வெற்றிப் படிகள் உங்களுக்காக காத்து நிற்கின்றன பயணியுங்கள்.

“விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் வருமா வீட்டுகுயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா “ என்ற வரிகளை நினைவில் கொள்ளுங்கள் இடம் , சூழல் கருதி செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் .

சுய படிப்பு :

டிஎன்பிஎஸ்சியை பொருத்தவரை சுயப்படிப்பு என்பதுதான் மிகுந்த அவசியாமாகும். ஆனாலும் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்ல கூடாது என்றும் கூற இயலாது. இருப்பினும் பயிற்சி நிறுவனங்கள் செல்ல இயலாதவர்களுக்கு  இணையங்கள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மையங்கள் எவ்வாறு படிக்க வேண்டுமென ஒரு சிறப்பு பயிற்சி அளிக்கின்றன. அதுவே டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல போதுமான வளங்களாகும். போட்டி தேர்வை எதிர்கொள்ளும் உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், அகடமிகள், வெற்றி பெற்ற மாணவர்கள் மூலம் தகவல்கள் பெற்று சிலேட்குச்சி இந்தியா தளம் வழங்குகிறது. இதனை அனைத்து பொதுதேர்வுக்கு தயாரகும் மாணவர்களும் படித்து பயன் பெற வேண்டும் . 

படிக்கும் வழிமுறைகள் :

குரூப் ஒன் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவருக்குமான ஒன் இந்தியா வழங்கும் டிப்ஸ்கள் எவ்வாறு படிக்க வேண்டும், அதனை எவ்வாறு தேர்வில் அப்ளை செய்ய வேண்டும், போன்ற விளக்கங்களுடன் கடுமையான உழைப்பு சுமார்ட் ஒர்க் கொஞ்சம் உபயோகித்தால் போதுமானது ஆகும். படிக்கும் நேரங்கள் தேர்வு எழுதுவோரின் சவுகரியம் பொருத்து முடிவு செய்யலாம். வேலை செய்து படிப்பவர்கள் தினமும் 100 கேள்வி பதில்கள் உடன் இயன்ற பாடங்கள் தினசரி 2 மணி நேரமாவது படிக்க வேண்டும். படிக்கும்போது ஒருமணி நேரத்திற்கொரு முறை ஐந்து நிமிட இடைவேளை தர வேண்டும்.

ஹாக்கிணி, தர்மசக்கரம் போன்ற யோக முத்திரைகள் செய்யலாம் மூளை நன்கு சுறுசுறுப்படையும். தொடர்ந்து படிக்க முடியும் மேலும் படித்தவற்றை திருப்பி பார்க்கவும் முடியும். கீ வோர்ட்ஸ் எனப்படும் வார்தை ஜாலங்கள் வைத்து படித்தால் எளிதில் குறிப்புகளை நினைவில் கொள்ளலாம். ஆண்டுகள் நினைவில் கொள்ள நிகழ்வுகளை நமக்கு பிடித்த தலைவர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் பிறந்ததினம், வருடத்துடன் ஒப்பிட்டு நினைவு கொள்ள வேண்டும் .

முந்தய  ஆண்டு  தேர்வு கேள்விகளின் தொகுப்பு:

போட்டி தேர்வுக்கு  படித்துக் கொண்டிருக்கும் அனைவரும் தேர்வை  வெல்ல மற்றும் தேர்வு குறித்து  தெரிந்துகொண்டு படிக்க உதவியாக இருப்பது முந்தய ஆண்டு கேட்ட கேள்விப் பதில்கள்  மற்ற தேர்வுகளின் தொகுப்பை தொடர்ந்து படித்து தேர்வை வெற்றி பெற வைக்கும். புதிதாக டிஎன்பிஎஸ்சி தேர்வை எழு

குரூப் 2 முந்தைய ஆண்டுகளின் மொழிப்பாட இணைப்பு வினா-விடைகள்

குரூப் 2 முந்தைய ஆண்டு பொதுஅறிவுப் பகுதி இணைப்பு வினா-விடை

குரூப் 2 முந்தைய ஆண்டு  மொழித்தாள் ஆங்கில  இணைப்பு வினா-விடை

குரூப் 2 தேர்வு  குறிப்புகள்:

குரூப் 2 நேரட் தேர்வு கொண்டதானது  குரூப் 1க்கு அடுத்த நிலையாகும். இப்பகுதியில் அனைத்து பிரிவினரும் பங்கு கொண்டு போட்டியிட்டு திறமையானோர் வெல்லலாம்.