குரூப் 1 தேர்வுக்கான டிப்ஸ்கள்!

குரூப் 1 தேர்வுகளுக்கான டிப்ஸ்கள்:

குரூப் ஒன் தேர்வானது டிஎன்பிஎஸ்சி  போட்டி தேர்வின் உயர்ந்த தரம் கொண்ட  துறையாகும். குரூப் ஒன் துறை ஏற்கனவே குறிப்பிட்டபடி  பொதுத்துறைப் பணியில் உயர்தரத்துடன்  இருப்பதால் இத்தேர்வுக்கு என்ற சவால்கள் இருக்கும் ஒராண்டு  சுழற்சி முறையில் முதன்மைத் தேர்வு எழுதிய 3 மாதத்தில் அடுத்த முக்கியத் தேர்வினை எழுத வேண்டும் அடுத்த 3 அல்லது 6 மாதத்தில் அரசின் அறிவிப்புகேற்ப சூழலுக்கு ஏற்ப தேர்வுக்காலங்கள் மாறுபடும் அதன் பின் நேரடி தேர்வு நடைபெறும். பயிற்சிக்குப் பின் அறிவிப்புகேற்ப  தேர்வர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.  தேர்வர்கள் காலநேரத்தை முதலில் கணக்கிட்டு  தேர்வுக்குத் தயாராக  வேண்டும்.

குரூப் ஒன் தேர்வானது  ஓராண்டு காலச் சுழற்சி முறையில் நடைபெறுவதால் பெருமாலான தேர்வர்கள் குரூப் ஒன்  போட்டி தேர்வுக்குப் படித்துக் கொண்டே மற்ற  போட்டி தேர்வுக்கும் தயராவர்கள  போட்டி தேர்வைப் பொருத்தவரை அனைத்துப் போட்டி தேர்வுக்கும்  பொதுஅறிவு மற்றும் ஆப்டி கணிதம், திறனாய்வு பொதுவானது ஆகும். ஆகையால் ஒரு தேர்வுக்குப் படித்துக் கொண்டே மற்ற தேர்வை வெல்லும் சாமார்த்தியசாலிகள் அதிகம் பேர் உள்ளனர்.

குரூப் ஒன் தேர்வு முதன்மை தேர்வை வெல்ல சுமார்ட் ஒர்க் என்ற ஆப்டி  கணிதத்தில் அதிகம் கவனம் செலுத்தி பொதுஅறிவை நேக்காகக் கொண்டு சென்று தேர்வை வெல்லும் தேர்வர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

பிரிலிம்ஸ் தேர்வில் ஆப்டி எண்ணிக்கை அதிகம் என்பதால் அது குறித்துத் திட்டமிட்டு   படிப்போர்களின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளனர். கட் ஆப் குறித்த அவர்களின் கண்ணோட்டமும் தேர்வின் கடினத்தன்மைக்கு ஏற்ப திட்டமிட்டு வெற்றியைப் பெற முனைப்பு காட்டும் தேர்வர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

டெஸ்ட் பேட்ச் எனப்படும் படித்தவற்றைத் தேர்வு மூலம் பரிசோதித்தல் என்பது அவசியம் ஆதலால் டெஸ்ட் பேட்சில் சேர்ந்து கொண்டு படிப்பதால் தேர்வர்கள்  தாங்கள் செய்யும் தவறை கண்டுபிடித்துச் சரிசெய்யலாம்.  இது  தேர்வர்களின் வெற்றியை உறுதி செய்யும் சுயப்பரிட்சை ஆகும். மேலும் டெஸ்ட் பேட்சில் எழுதும தேர்வர்கள் உறுதியாக டெஸ்ட் பேட்சினை தொடர்ந்து எழுதி தேர்வுக்குத் தங்களை முழுமையாக தயார் நிலையில் வைக்கச் செய்யும் அடுத்தடுத்த தேர்வுக்கு கால அட்டவணையிட்டு படிக்கச் செய்யும்.

குரூப் 1 தேர்வுக்குப் படிக்கும் பொழுது அறிவியல், நடப்பு நிகழ்வுகளை ஒட்டிய  அறிவியல், நிகழ்வுகளின்  தொகுப்பு  ஆகியவற்றைப்  படித்து  50 கேள்விகள் கொண்ட கணிதம் உடன் அறிவியல் கேள்விகள் 25 மற்றும் நடப்பு நிகவுகள் என 95 கேள்விகளுக்குத் தயாராகி கொண்டு  அடுத்து இருக்கும் பாடங்களில் அடிப்படையை மட்டும் தெளிவாகப் படித்துக் கட் ஆஃப் பெற்று முதன்மை தேர்வை சுமார்ட் ஒர்க் மூலம் வென்றவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

கணிதம் அதிகம்  தொடர்பில்லாத தேர்வர்கள் குறைந்த பட்சம் 25  கேள்விகளுக்குத் தங்களை தாயார் செய்து நடப்பு நிகழ்வுகள் மற்றும் இந்திய வரலாறு, பொருளியல், அரசியல் அமைபபு பாடஙகளை படித்துப் கட் ஆஃபில் மதிபெண்களை உயர்த்துகின்றனர்.

போட்டி தேர்வுக்குத் தயாராக தொடங்கும் தேர்வர்கள், தேர்வை வெல்ல  வேண்டும் என்ற தீர்மானம் மற்றும் எந்தக் குறிப்பிட்ட காலத்தில் அந்தக் தேர்வை  வெல்ல வேண்டும்.  அதற்காக பின்பற்ற வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியாக  திட்டமிட்டு  செயல்பட வேண்டும். மேலும் திட்டமிடலில் ஏதாவது மாற்றம் இருப்பின் அடுத்த இலக்கையும் வரையறுத்து செயல்பட வேண்டும். போட்டி தேர்வை  தங்களது கனவாக தேர்ந்தெடுக்கும் தேர்வர்களிடையே உள்ள பிரச்சனை என்னவனில் அவர்களால் தங்களது திட்ட இலக்கை  அடைய ஏற்படும் தடைகளைத்  தகர்தெரிய முடிவதில்லை அல்லது  தடைகளை பின்தள்ளி வெற்றி பெற பின்ப்பற்ற வேண்டிய மாற்று நடவடிக்கைள் தெரிவதில்லை இதுவே அவர்களின் பிரச்சனைக்குக் காரணமாகும்.  திட்டமிடலில் தெளிவும், தடைகளைத் தாண்டும் அறிவும் தேவையான ஒன்றாகும்.

உடல், மனம், வேலை அல்லது நிதியமைப்பு, குடும்ப சூழல் போன்ற சுற்றியுள்ள சூழல்களை  மனதில் வைத்து தேர்வுக்குப் படிக்க வேண்டும். மேலும் படிக்கும் காலத்தில்  ஏற்படகூடிய உடல், மனம், குடும்ப சூழல் சார்ந்த எதிர்பாரதச் சூழல்களை சமாளிதக்கும் திறன் படைத்தவர்கள் இந்தத் தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள், சுற்றியுள்ள காணங்களால் ஏதாவது ஒன்றிலிருந்து இடையூறுகள் வரும் என்ற சிறு சந்தேகம் இருப்பவர்கள் மற்றும்  அதுசார்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் தெளிவு இருப்பவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள்  ஆவார்கள்.

படிக்கும் பொழுது சுயத் தேர்வு எழுத, படித்தவற்றை டெஸ்ட் பேச்சில் எழுதியவுடன் அது குறித்த கலந்துரையாடல்கள் செய்யவும், பாடங்களில் தீவிர கவனம் கொண்ட சுயநலமற்ற நண்பர்கள் கூட்டணி  அமைத்து தேர்வுக்குப் படியுங்கள் தேர்வை எளிதில் வெல்லலாம் படித்தவை நினைவில் இருக்கும்.

குரூப் 1 தேர்வில் அகலமாகப் படித்தலுடல் ஆழமாகப் படிக்க வேண்டும். அனைத்தும் படிக்கின்றேன் என குழம்புவதைக் காட்டிலும்,  குறிப்பிட்ட பாடங்களைப் படித்து அவற்றில் தங்களை வலிமைப்படுத்தியபின் நேரம் இருப்பின் புதிதாய் படிக்கத் தொடங்கலாம்.

ஒருமுறை முதன்மைத் தேர்வுக்குப்  படிக்கும் பொழுது, முக்கியத் தேர்வுக்கும் சேர்த்து படிப்பதைப் போல் படியுங்கள், உங்களை முக்கியத் தேர்வில் நெருக்கடி நிலையுக்குச் செல்லாமல் தேர்வினை எதிர்கொள்ளத் துணிவு  தரும்.

நேர்மறை சிந்தனை, போராடும் குணம் கொண்டவர்கள் பொதுவாக இத்தேர்வுகளை எழுத தகுதியுடையவர்களாகக் கருதப்படுகின்றார்கள். ஆர்வமுள்ளவர்களைவிட ஆழ்ந்த நம்பிக்கையுடன் படிப்பவர்கள் வெற்றியினை எளிதாகப் பெற்றுவிடலாம்.