குரூப் ஒன் தேர்வின் விளக்கம்!

குரூப் ஒன் தேர்வுகள் :

குருப் ஒன் மூன்று தேர்வு முறை கொண்டது, முதன்மை, முக்கியத்தேர்வு, நேரடிதேர்வு ஆகும். முதன்மை தேர்வு முறை, கொள்குறி வினா-விடை கொண்டது. ஒரே தாள், இரநூறு கேள்விகள் மூன்று மணி நேரம் கொண்டது. 

முக்கியதேர்வு மூன்று தாள்கள், ஒவ்வொன்றும் மூன்று மணி நேரங்கள் கொண்டவை. முக்கியத் தேர்வுக்கான விடைகள் விளக்கவுரையில் இருக்க வேண்டும். நேரடி தேர்வில்  முதன்மை, முக்கியதேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். நேரடிதேர்வு தேர்வு எழுதுவோரின் திறன் பொருத்து நேரம் மாறலாம், ஆனால் அதிகபடசம் அரை மணி நேரம் நடக்கும் .

குரூப் 1 தேர்வுகள்தாள்கள்
முதன்மை தேர்வுதாள் ஒன்று
முக்கியத் தேர்வுதாள் மூன்று
நேரடி தேர்வுநேரடியாக நடைபெறுவது

தேர்வு எழுதுவோர் தேர்ந்தெடுப்பு முறை :

குருப் ஒன் தேர்வு எழுதுவோர் தேர்ந்தெடுப்பு முறையானது தேர்வு எழுதுவோரின் சாதிப் பின்னனி அதன்படி நிர்ணயித்த மதிபெண்கள் வைத்துத் தேர்ந்தெடுக்கப்படுவார் அதாவது முதன்மை தேர்வில் அவர் சேர்ந்த பிரிவு அவரைச் சேர்ந்தோர் கட்ஆஃப் மதிபெண்கள் பொருத்து மாறுபடும். நேரடி தேர்வும் அவ்வாறே ரிசர்வேசன் பெரும் பங்கு வகிக்கும். மேலும் குரூப் ஒன் தேர்வை பொருத்த வரைக்கும் சில பதவிகளுக்கு மதிபெண்களோடு, பட்டப்படிப்புகள் மற்றும் தேவைப்படும் உடல் தகுதிகள் முன்னுரிமை பெறுகின்றன. இவ்வாறு அனைத்து நிலைகளையும் கடந்துதான் குருப் ஒன்னில் தேர்வு எழுதுவோர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

குரூப் ஒன் தேர்வுநிலை விளக்கங்கள் :

முதன்மை தேர்வு :

குரூப் ஒன் தேர்வானது மூன்று நிலைகொண்டது முதன்மை தேர்வானது மூன்று மணி நேரம். 200 கேள்விகள் கொண்டது. கொள்குறி என்ற அப்ஜெக்டீவ் முறையில் இருக்கும். அவற்றில் 150 கேள்விகள் பொது அறிவு, 50 கேள்விகள் கணிதம் மற்றும் திறனாய்வு கொண்டது. கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

முக்கியத் தேர்வு :

தாள் 1:

முக்கியதேர்வு தேர்வானது மூன்று தாள்களைக் கொண்டது. ஒவ்வொரு தாளும் 300 மதிபெண்களை கொண்டது. அவற்றிக்கான விடைகள் விளக்க உரையில் இருக்க வேண்டும். மேலும் தேர்வு எழுதுவோர் ரூபாய் 200 விண்ணப்ப கட்டணமாக   செலுத்த வேண்டும். 3 மதிபெண், 5 மதிப்பெண் முதல் 8 மதிபெண்கள் என கேள்விகளுக்கான மதிபெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். கேள்விக்கான விடைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதலாம். முதல் தாளானது கணிதம் திறனாய்வு விளக்கப்படிகளுடன் எழுத வேண்டும். மேலும் வரலாறு&பண்பாடு மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் பட்டப்படிப்புகள் தரத்துடன் கேள்விகள் அமையும். இவற்றிக்கான விடைகள் கவனமுடன் எழுத வேண்டும் .

தாள் 2:

முக்கியதேர்வில் இரண்டாம் தாள் மூன்று மணி நேரம், விளக்க உரையுடன் கேள்விக்கான விடை எழுத வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஏதோ ஒன்றில் விடை எழுதலாம். ஆனால் கேள்விகள் இரு மொழியிலும் இருக்கும். உலக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவில் அதன் தாக்கம் & இந்தியாவின் புவியியல் கூறுகள், தமிழ் சமுக,  பண்பாடு வரலாற்றுக் கூறுகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விடைகள் எழுதலாம். ஆங்கிலத் திறன் பகுதியும் உள்ளன. மத்திய மாநில நிறுவாகத்துடன் தமிழகத்தின் சிறப்புக் கூறுகள் கொண்டது இரண்டாம் தாள். 3 மதிபெண், 5 மதிப்பெண் முதல் 8 மதிபெண்கள் என கேள்விகளுக்கான மதிபெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் மேலும் மதிபெண்கள் மாற்றியும் அமைக்கப்படலாம் .

தாள் 3:

முக்கியத் தேர்வில் மூன்றாம் தாள் மூன்று மணி நேரம் கொண்டது. தாள் மூன்று மணி நேரம், விளக்க உரையுடன் கேள்விக்கான விடை எழுத வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஏதோ ஒன்றில் விடை எழுதலாம். ஆனால் கேள்விகள் இரு மொழியிலும் இருக்கும். மூன்றாம் தாளில் நடப்பு நிகழ்வுகளுடன் இந்தியா, உலக அளவில் அதன் முக்கியத்தன்மை அடங்கியிருக்கும் மற்றும் இந்தியாவின் நடப்பு பொருளாதார நிலை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியவின் போக்கு இவற்றில் கேள்விகள் அடங்கியிருக்கும். 3 மதிபெண், 5 மதிப்பெண் முதல் 8 மதிபெண்கள் எனக் கேள்விகளுக்கான மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் மேலும் மதிபெண்கள்  டிஎன்பிஎஸ்சியால் மாற்றியமைக்கப்படலாம்.

குரூப் ஒன் நேரடிதேர்வு :

குரூப் ஒன் தேர்வின் இறுதி நிலையாக நேரடிதேர்வு இது கேள்விகளுக்கு விடைதரும் போக்கில் இருக்கும். நேரடிதேர்வானது தேர்வு எழுதுவோரின் பிறந்தயிடம் அவ்விடத்தின் வரலாறு சிறப்புத்தன்மை மற்றும் தேர்வளாரின் பொழுது போக்குகள், நடப்பில் நாடு மற்றும் சமுகசிக்கல்கள் பற்றிக் கேள்வியிருக்கும். தேர்வாளரின் சாமர்த்தியம், விடைகூறும் போக்கு ஆளுமை தன்மை கணக்கிட்டு மதிபெண்கள் வழங்கப்படும். இது 120 மதிபெண்கள் கொண்டது ஆகும். இறுதியில் முக்கியத் தேர்வு மற்றும் நேரடிதேர்வு மதிபெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டுத் தேர்வாளரின் சாதி பின்னனி ரிசர்வேசன் முறையில் மதிபெண் வழங்கப்பட்டுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுகிறார் .

தேரவில் வெற்றிப்  பெற்றவர்கள்  அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஏற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும். பயிற்சிக்குப் பின் பதவிகளில் அமர்த்தப்படுவார்கள்.