டெக்னாலஜி

ஒகினாவோ எலக்டிரிக்கல் பைக் சந்தைக்கு வர 6 மாதம்தான்!

ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் டூ-வீலர் தயாரிப்பாளராக மாறியுள்ளது. குருகிராமில் தலைமையிடமாக கொண்ட இந்த தயாரிப்பு நிறுவனம் தனது இரண்டு டூ-வீலர்களான, ரிட்ஜ் மற்றும் பிரைஸ் என்ற பெயரிலான டூ-வீலர்களை தற்போது விற்பனை செய்கின்றது. இந்த ஸ்கூட்டர்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கேற்றவாறு கம்பெனியும் ஆஃபர்கள் விடுகின்றது.

ஒகினாவா நிறுவனத்தின் புதிய வசதி கொண்ட மற்றும் அதன் போர்ட்போலியோவுடன் கூடிய லைட் இ-ஸ்கூட்டர்களை வெளியிடுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. 

புதிய ஒகினாவா லைட் ஸ்கூட்டர்கள்  சோதனை செய்யப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. எண்ட்ரி லெவல் லைட் ஸ்கூட்டர்கள் அதன் டிசைன் மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தை கவர்ந்து, இந்த ஸ்பை ஷாட்கள் பெரியளவிலான ஆப்பர்களுடன் விற்பனைக்கு  கொண்டுவர  திட்டமிட்டுள்ளது.

 பெரிய அளவு எல்இடி ஹெட்லேம்ப்களுடன் டே டைம் ரன்னிங் லைட்களும் பொருத்தப்பட்ட நிலையில் கிடைக்கிறது.  ஸ்கூட்டர்களின் ஸ்டைல்கள் அனைவரையும் கவர்கின்றது. 

வலிமையான ஹெட்லைட் யூனிட்களுடன், 

இரண்டு புறங்களிலும் இன்டிக்கேட்டர் லைட்களும் இடம் பெற்றிருக்கும். கூடுதலாக குளோவ்பாக்ஸ், 

ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் 

பிளாக் பேக்லைட் எல்இடி இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்களுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. 

பின்புறத்தில் சிங்கிள் டியில் லைட் யூனிட்கள் எல்இடி மற்றும் 

டேர்ன் இன்டிக்கேட்டர்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.அதிக ஆற்றல் கொண்ட ஐ-பிரைஸ் சிரீஸ்களுடன்  இருக்கும். மேலும் இந்த இமேஜ்களின் படி, லைட்கள் லேசான எடை கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த லைட் ஸ்கூட்டர்கள் குறித்த தகவல்கள் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் போது வெளியிடப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர்கள் வரும் 2020ம் ஆண்டு முதல்  மார்க்கெட்டில் அறிமுகமாகும் என்று தெரிய வந்துள்ளது.

விலையை பொருத்தவரை, ஒகினாவா லைட் மாடல்கள், இந்த பிரிவில் மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ள உள்ள கன்வென்சனல் என்ட்ரி-லெவல் 100cc ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும். ரூபாய் 58,000 விலையாக  இருக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *