வளர்பிறை அஷ்டமியில் இராசிப்பலன் பஞ்சாங்கம்
காலை தரிசனம் ! இன்று ஆதித்தனார் வழிப்பாட்டு அஷ்டமி வளர்பிறை நாளில் கால பைரவர் வழிபாடு செய்து வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் நினைத்தவற்றை அனைத்து நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.
ஸ்ரீ காலபைரவர் தரிசனம்
பைரவ தியானம்
ஏகாஸ்யம் து சதுர்புஜம் த்ரிணயநம் க்ருஷ்ணம் ஸுவ்ருத்தேக்ஷணம்
சூலம் ப்ரம்மகபாலகம் டமருகம் நாகம் வஹந்தம் கரை:
ஜ்வாலாகேசபயங்கரம் சசிதரம் தம்ஷ்ட்ராம் கராளானனம்
கண்டா தாம விபூஷிதம் ச்வனயுதம் ஸ்ரீபைரவேசம் பஜேத் !
பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்
இன்று
ஞாயிற்றுக்கிழமை!
சார்வரி வருடம் :பங்குனி மாதம் !08ஆம் தேதி !
மார்ச் மாதம்: 21ஆம் தேதி !(21-03-2021)
சூரிய உதயம் :
காலை : 06-20 மணி அளவில் !!
இன்றைய திதி :
இன்று அதிகாலை 04.38 வரை சப்தமி ! பின்பு அஷ்டமி!!
இன்றைய நட்சத்திரம் :
இன்று மாலை 04.43 வரை மிருகசீரிஷம் ! பின்பு திருவாதிரை !!
யோகம் :
இன்று முழுவதும் சித்தயோகம்!
இன்று
சம நோக்கு நாள் !!
நல்ல நேரம் :
காலை : 06-30 மணி முதல் 07-30 மணி வரை !
மாலை : 03-30 மணி முதல் 04-30 மணி வரை!!
சந்திராஷ்டமம் :
அனுஷம் ! கேட்டை !
ராகுகாலம் :
காலை : 04.30 மணி முதல் 06-00 மணி வரை !
எமகண்டம்
பகல் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!
குளிகை :
பிற்பகல் : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
சூலம் : மேற்கு !
பரிகாரம் : வெள்ளம் !!
இன்று வளர்பிறை அஷ்டமி
மேஷம்- நன்மை
ரிஷபம்- வரவு
மிதுனம்- பொறுமை
கடகம்- சவால்
சிம்மம்- நட்பு
கன்னி- ஆதரவு
துலாம்- சலனம்
விருச்சிகம்- கவனம்
தனுசு- உதவி
மகரம்- தேர்ச்சி
கும்பம்- புகழ்
மீனம்-நற்செயல்
மரத்தின் வேரை கிளைகளில் தேடாதே, உங்களுக்குள் தேடவேண்டியதை பிறரிடம் தேடாதீர்கள்.
சிவனென்னு ஒரு ஓராமா அமைதியாக சில மணிநேரம் அமர்ந்து தியானித்தால் புரியும், ஆதி சிவனே உம்முள் இருக்கிறார் என்று, சிவன் எனும் செயலும் நீயே, ஆட்டுவிக்கும் சக்தியும் நீயே, எல்லாமே உம்முள் இருக்க எங்கோ எதையோ தேடி எங்கெங்கோ அலையும் மானிடா, தன்னை அறியாதவன் தன்னிலை இழப்பான்…