Jallikattu bulls

ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் “இரத்த நிலவு “- இந்த கிரகணத்தால், ஐந்து ராசிக்காரர்கள் கவனம்

2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3 ஆம் தேதி நிகழ்கிறது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நகரும்போது, ​​சூரியனின் நேரடி ஒளியைத் தடுத்து அதன் நிழல் சந்திரனின் மீது படும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது

சந்திர கிரகணத்தின் இந்திய நேரம்

முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி, மாலை 4.45 மணிக்கு தொடங்குகி, முழு நிலவாக மாலை 5:10 க்கு காட்சி அளிக்கும். மேலும் மாலை 5:40 ல் முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது

சிம்மம் ராசியினருக்கு எச்சரிக்கை

தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மாறுபட்ட மாற்றத்தை காணலாம், கூட்டுத் தொழில் தொடங்கும் போது பொறுமைஅவசியம், மற்றவரின் உணர்வுகளை புரிந்து கொள்வது நல்லது, தன்மையாக நடந்து கொண்டால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்

துலாம் ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம்

தொழில் சம்பந்தப்பட்ட இடங்களில் எதிர்பாராத பிரச்சனை தேடிவரும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை, பதட்டமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும்,நிதானமாக தெளிவான முடிவெடுப்பது நல்லது

மகர ராசியினர் செலவு அதிகரிக்கும்

ஆடம்பர செலவு,மருத்துவ செலவு,என வரவுக்கும் மீறிய செலவுகள் அதிகரிக்கும், வீட்டிலேயே அல்லது அலுவலகத்திலேயே பிரச்சனைகளை சந்திக்கும் போது நிதானமாக கையாளுவது நல்லது,பொறுமையுடன் இருப்பது நல்லது

கும்பம் ராசியினருக்கு மன அழுத்தம்

வேலை அல்லது பணியிடத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது மனதில் பல குழப்பங்களை ஏற்படுத்தும், கடினமான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது, மன அழுத்தம் ஏற்படும் விஷயங்களை கண்டுக்காமல் இருப்பது நல்லது, உடற்பயிற்சி தியானம் அல்லது ஆன்மீகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வது நல்லது

மீனம் ராசியினருக்கு குற்ற உணர்ச்சி

மீனம் ராசியினருக்கு பல தடைகளை தாண்டி வெற்றி பெரும் வாய்ப்பு உருவாகும், ஆனால் சிறு வயதில் ஏற்பட்ட தவறை எண்ணி வருந்தி குற்ற உணர்ச்சிக்கு ஆகுவீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *